முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறகடிக்க நினைக்கும் புதிய பறவைகள் - பாதை தெரியாமல் பயணம் தடைபடும்: ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஸ்டாலின் கருத்து

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசம் குறித்து, தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ. அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன்பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ. அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன்பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. -- ஸ்டாலின்

எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கியே என்பதைப்போல, எல்லாருடைய கண்ணும் - கருத்தும் நம்மை நோக்கியே இருக்கின்றன. நமக்கான பாதை நீண்டதாயினும், மிகவும் தெளிவானது. அதற்காகவே, பிப்ரவரி 1- ம் தேதி முதல் களஆய்வு நடத்த திட்டமிடப்பட்டு, தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.


கள ஆய்வின் மீது நீங்கள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில், கழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை நிச்சயம் மேற்கொள்வேன் என்ற உறுதியினை அளிக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து