முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2025      தமிழகம்
Anbil 2

Source: provided

திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை விஜய் நேற்று முன்தினம் தொடங்கினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்துகிறார்.

அதன்படி நேற்று முன்தினம் காலை நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார். அங்கு பரப்புரை மேற்கொண்ட விஜய், தி.மு.க. அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில் இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் முன்கூட்டியே பிரச்சாரம் தொடங்குவது வழக்கம் தான். மற்ற கட்சிகள் மீது விமர்சனத்தை முன்வைப்பர். எந்தெந்த கட்சிகள் என்னென்ன செய்துள்ளன? நாங்கள் வந்தால் என்ன செய்வோம்? என்றெல்லாம் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பர்.

திருச்சியில் கூட்டத்தை கூட்டியதாக செய்தியில் பார்த்தேன். அப்போது நான் சென்னையில் இருந்தேன். விஜய் அவர்கள் கேக்கலையா, கேக்கலையா என்று பேசியதை செய்தித்தாள்களில் பார்த்தேன். கேக்கலை, கேக்கலை என்று சொல்வதை விட திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை என்று தான் தெரிகிறது. நீங்கள் பத்திரிகையாளர்கள். அனைவரும் திருச்சியை சேர்ந்தவர்கள். திருச்சிக்காரர்களாக கொஞ்சம் யோசித்து பாருங்கள். பல்வேறு ஆட்சிகள் கடந்து சென்றுள்ள நிலையில் தற்போதைய வளர்ச்சியை கண்கூடாக பார்த்து வருகிறீர்கள்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். 128 கோடி ரூபாய் மதிப்பில் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் 38 ஏக்கரில் கனரக வாகன சரக்கு முனையத்தை அமைத்து கொடுத்துள்ளோம். தந்தை பெரியாரின் பெயரில் 236 கோடி ரூபாயில் காய்கறி அங்காடி அமைக்க 22 ஏக்கரில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கலைஞரின் பெயரில் 408 கோடி ரூபாய் மதிப்பில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டி தரப்பட்டுள்ளது. இந்த வசதியை நீங்களே பாராட்டினீர்கள். கிட்டதட்ட விமான நிலையத்தில் இருப்பது போன்ற வசதிகள் இருப்பதாக சுட்டிக் காட்டினீர்கள்” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து