முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதல்...

இந்தியர்களின் நெஞ்சங்களை பதற வைத்த பஹல்காம் பயங்கவராத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுடன் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்போட்டியை நாட்டுப்பற்றுமிக்க இந்திய ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து உள்ளது. பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் பி.சி.சி.ஐ.,க்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

26 பேர் உயிரிழப்பு...

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் கொல்லப் பட்டனர். இதற்கு 'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. தற்போதும் பயங்கவாதத்திற்கு எதிரான 'சிந்துார் ஆப்பரேஷன்' தொடர்வதாக பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்து உள்ளனர்.

பணம் பிரதானம்:

ஆனால், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மட்டும் பாகிஸ்தானுடன் மறைமுக உறவு கொள்ள விரும்புகிறது. பணம் மட்டும் குறிக்கோளாக கொண்ட சில 'ஸ்பான்சர்கள்', ஒளிபரப்பு நிறுவனங்களும் துணை போகின்றன. ஆசிய கோப்பை தொடரில் வரும் 14ல் நடக்க உள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டி மூலம் பெரும் லாபம் பார்க்க முயற்சிக்கின்றன.

ரசிகர்கள் கொந்தளிப்பு...

பஹல்காம் தாக்குதலின் போது முதலை கண்ணீர் வடித்த சில அரசியல்வாதிகளும், பி.சி.சி.ஐ., செயலை கண்டிக்காமல் அமைதியாக உள்ளனர். வழக்கமாக இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். இம்முறை இந்திய ரசிகர்கள் கொந்தளிப்பாக உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து