முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-1 2025-09-14

Source: provided

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி நகரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கார் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டிருந்த மனைகள் காரணமாக, அங்குள்ள மக்கள் யாரும் கணினி பட்டா பெற முடியாமல், தங்கள் மனையை வாரிசுகளுக்கு மாற்றவோ, அடமானம் வைத்து வீடு கட்டவோ, விற்கவோ இயலாமல் நீண்டநாள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், சர்க்கார் புறம்போக்கு வகைப்பாடு என இருந்ததை 'ரயத்துவாரி நத்தம் மனை' என மாற்றப்பட்டு, கிருஷ்ணகிரியில் சுமார் 3,500 பேருக்கும் கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒசூர் நகரிலும் சுமார் 8,150 பயனாளிகள் பல ஆண்டுகளாக பட்டா பெற முடியாமல் இருந்தனர். இப்போது அவர்களுக்கும் வகைப்பாடு மாற்றி கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நகரப் பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் வசித்து வந்த மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. இதுவரை இலவச வீட்டுமனை பட்டா என்பது ஊரகப் பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கிருஷ்ணகிரியில் நகரத்தில் 1,802 பேருக்கும், ஒசூர் நகரத்தில் 3,222 பேருக்கும் முறையாக வரைமுறைப்படுத்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 5,154 வீட்டுமனை பட்டாக்களும், ரயத்துமனையாக மாற்றம் செய்யப்பட்ட 8,811 பட்டாக்களும், வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 11,174 பட்டாக்கள், நகர நில வரித்திட்டத்தில் 13,073 பட்டாக்கள், நத்தம் வீட்டுமனை 39,533 பட்டாக்கள், பட்டியல் மற்றும் பழங்குடியினர் இணையவழி 6,425 பட்டாக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுப்பான்மையினர் 1,240 பட்டாக்கள், வனஉரிமைச் சட்டம் 2006-ன்படி 301 பட்டாக்கள் என மொத்தம் 85,711 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுவதாக அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து