முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்துக்கான காவிரி நீரின் அளவை குறைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது: ஜி.கே. வாசன் கருத்து

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழகத்திற்கு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த 192 டி.எம்.சி தண்ணீரின் அளவிலிருந்து தற்போது 14.75 டி.எம்.சி அளவிலான தண்ணீரை குறைத்திருப்பது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்று த.மா.கா தலைவர் வாசன் கூறியுள்ளார்.

தமிழக நிலத்தடி நீரின் அளவு அதிகம் என்ற காரணத்தை கூறி 192 டி.எம்.சி தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி தண்ணீராக குறைத்திருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.  - ஜி.கே.வாசன்

இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்திற்கு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த 192 டி.எம்.சி தண்ணீரின் அளவிலிருந்து தற்போது 14.75 டி.எம்.சி அளவிலான தண்ணீரை குறைத்திருப்பது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அதாவது, தமிழக நிலத்தடி நீரின் அளவு அதிகம் என்ற காரணத்தை கூறி 192 டி.எம்.சி தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி தண்ணீராக குறைத்திருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்திருப்பதோடு, தற்போது விவசாயிகள் வறட்சியின் விளிம்பில் இருக்கிறார்கள் என்பதையும் முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு ஆகியவை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து