காஞ்சிபுரம் : வைபவத்தின் 28-ம் நாளான நேற்று வெளிர்நீலநிற பட்டாடை அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதம் வைபவம் நடைபெற்று வருகிறது. அவரை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வதால் காஞ்சிபுரம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி அத்தி வரதரை தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதனிடையே தினமும் ஒரு பட்டாடை அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதன்படி வைபவத்தின் 28-ம் நாளான நேற்று வெளிர் நீலநிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சி அளித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.