முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2019      சினிமா
Image Unavailable

66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது

66-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி பத்மாவத் திரைப்படத்திற்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷூக்கு விருது கிடைத்துள்ளது.

 மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், உத்தரகாண்ட் மாநிலம் சிறந்த சினிமா பிரண்ட்லி ஸ்டேட் என்ற விருதை வென்றுள்ளது. திரைப்படம் எடுக்க உகந்த மாநிலமாக உத்தரகண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய பாரம் என்ற தமிழ்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் விருதுகளுக்கு கே.ஜி.எப் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த அன்பறிவ் என்ற இரட்டையர்கள் கே.ஜி.எப் படத்தில் சண்டை காட்சியை வடிவமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மாவத் படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடன கலைஞருக்கான விருது பத்மாவத் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பாடகருக்கான விருதும் இந்த படத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. சிறந்த தெலுங்கு மொழி படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடை வடிவமைப்பாளர் விருதும் இந்த படத்திற்கே வழங்க்கப்பட்டுள்ளது. சர்ஜிகல் தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ’உரி’ திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தி திரைப்படமான அந்தாதூன் என்கிற படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சமூக படத்திற்கான விருது அக்சய் குமார் நடிப்பில் வெளியான பேட்மேன் திரைப்படம் வென்றது.

சிறந்த நடிகர்களுக்கான விருது அந்தாதுன் மற்றும் உரி படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு ஆயுஷ்மான் குரானா, விக்கி கவுஷல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மகாநடி தெலுங்கு திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த அறிவியல் தொழில்நுட்ப படத்திற்கான தேசிய விருது 'ஜி.டி.நாயுடு - தி எடிசன் ஆப் இந்தியா' என்ற படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருதி இந்தியில் வெளியன உரி படத்தை இயக்கியதற்காக ஆதித்யா தத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகை விருது 'பதாய் ஹோ' இந்தி படத்தில் நடித்த சுரேகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து