எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் வரை 5 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கின்றது. 2 தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்து விட்டோம். மேலும் 3 தடுப்பணைகள் கட்ட அரசு பரிசீலனை செய்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தண்ணீர் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மேட்டூர் அணை தற்போது 101 அடியை எட்டியுள்ளது. அணையில் 66 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. மேலும் இப்பொழுது 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். இன்னும் பருவ மழை பெய்யவில்லையே, இன்றைக்கு விவசாயிகளுக்கெல்லாம் தண்ணீரை எப்படி திறப்பது என்று எண்ணிக் கொண்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்ட வந்தவுடனே மழை பொழியும். ஆனால் இந்த முறை கொஞ்சம் காலதாமதமாக பெய்திருக்கிறது. இருந்தாலும், நாம் நினைத்தபடி எல்லாம் வல்ல இறைவனுடைய அருளால், ஏழுமலையானுடைய அருளாசியோடு, இன்றைய தினம் மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அணை முழு கொள்ளளவை எட்டும். விவசாயப் பெருமக்களுக்குத் தேவையான நீர் முழுவதும் இந்த ஆண்டு வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் பாசன வசதியை பெறுவர் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு இந்த தண்ணீர் திறப்பின் மூலமாக, சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றது. மிகப்பெரிய பாசனம் பெறுகின்ற ஒரு ஜீவநதி என்று சொன்னால் அது காவேரி நதி தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு தேவைப்படும் மொத்த நீரின் அளவு சுமார் 339 டி.எம்.சி. ஆகும். மேட்டூர் அணையிலிருந்து 220 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் மீதமுள்ள 119 டி.எம்.சி. தண்ணீர் வடகிழக்கு பருவமழை மூலமும் உறுதி செய்யப்படும். மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய்களுக்கு இன்று(நேற்று) முதல் 132 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும். இதனால் சுமார் 45,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுவதால் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள் பயன்பெறுவார்கள். இதற்காக சுமார் 9.6 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். மேலும் காவேரி ஆற்றிலிருந்து சுமார் 155 திட்டங்களின் மூலம் தினசரி 1700 மில்லியன் லிட்டருக்கும் மேற்பட்ட தண்ணீர் 8 மாவட்டங்களிலுள்ள பொதுமக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்படுகின்றது. மேலும், 20 மாவட்ட மக்களுக்கு காவேரி நீர் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.
அதுமட்டுமல்லாமல், நீர் மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையங்கள் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், ஆக மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கின்றது. மேலும், காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள 7 கதவணை நீர் மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து பல்லாண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்தது. அந்த தூர்வாருகின்ற நிகழ்ச்சியும் இந்த ஆட்சியில்தான் நடைபெற்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 1949 விவசாயிகள் 2.70 லட்சம் கனமீட்டர் அளவு வண்டல் மண்ணை எடுத்துச் சென்று பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி தண்ணீர் திறந்து விடுகின்ற பொழுது 109 அடி இருந்தது. அணையினுடைய நீரின் அளவு 71 டி.எம்.சி. இருந்தது. சென்ற ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து 210 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்திற்காக நாம் திறந்து விட்டோம். அதுமட்டுமல்லாமல், விவசாய மக்களுக்கு போதுமான விதை, நெல், உரம் ஆகியவையெல்லாம் இன்றைக்கு இருப்பு இருக்கின்றது. விவசாயிகளுக்கு தேவையான அளவு உரிய நேரத்தில் வழங்கப்படும். காவேரி டெல்டா விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் மேட்டூர் கால்வாய் பாசன பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் நீரை பங்கீட்டு, நிலைமைக்கேற்ப தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைக்குமாறும், மிக அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டுமென்றும் விவசாயப் பெருங்கடி மக்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டு வருண பகவானின் கருணையால் டெல்டா பாசன விவசாயிகளுக்குத் தேவையான நீர் வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
குடிமராமத்துத் திட்டத்தை பொறுத்தவரைக்கும் முழுக்க முழுக்க விவசாயிகள்தான் அந்தத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக, இந்தத் திட்டம் ஒரு வெற்றிகரமாக அமையும் என்ற முறையிலே இந்தத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 2017-2018-ஆம் ஆண்டு 1,519 ஏரிகளுக்கு பரிட்சார்த்த முறையில் ரூ. 100 கோடி ஒதுக்கி அந்தப் பணியை துவக்கினோம். விவசாயிகளிடத்திலே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததன் விளைவாக, 2018-2019-ம் ஆண்டு 1,511 ஏரிகள் எடுக்கப்பட்டு ரூ. 328 கோடி இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணி முடிவுறும் நிலையில் இருக்கின்றது. விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்று, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக சுமார் ரூ. 500 கோடி மதிப்பீட்டில், சுமார் 1,829 ஏரிகள் இந்த ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொதுப்பணித் துறையின் கீழ் இருக்கின்ற 14,000 ஏரிகளும் படிப்படியாக தூர்வாரப்படும். ஆகவே, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி, குளம், குட்டை போன்றவற்றை தூர்வாருவதற்கு ரூபாய் 1,250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணியும் இன்றைக்கு துவங்கப்பட்டு விட்டது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கின்ற குளங்கள், ஏரிகள், குட்டைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கக்கூடிய சூழ்நிலையை இந்த அரசு திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகக் கூடாது என்பதற்காக ஓடையின் குறுக்கே, நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுகின்றது. இதற்காக அரசால் ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூபாய் 600 கோடி செலவழிக்க திட்டம் தீட்டப்பட்டு செயலாக்கத்திற்கு வந்திருக்கின்றன. மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் வரை கிட்டத்தட்ட 5 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கின்றது. 2 தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்து விட்டோம். மேலும் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசின் பரிசீலனையில் உள்ளது. அதற்குண்டான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கின்ற பணி நடைபெற்று வருகின்றது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: இமாச்சலப்பிரதேசத்தில் 10 பேர் பலி
02 Jul 2025சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காண
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் இருவர் கைது
02 Jul 2025சென்னை : ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பைப் குண்டு' வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வ
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சீமான் மீதான டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
02 Jul 2025மதுரை : சீமான் மீது டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
2 மடங்கு கட்டணம் வசூலிக்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அனுமதி
02 Jul 2025புதுடெல்லி : ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் காவல் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
02 Jul 2025சென்னை : தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத போலீஸ் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.