முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

தென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது  சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் போராட்டம் நடத்தினர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்தது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பலரும் தங்கள் கருத்துகளையும், எதிர் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்தது. இதனால், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச கவனம் பெற முயன்ற பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென் கொரியாவின் தலைநகரமான சியோலில் உள்ள சிலர் கடந்த  போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தை தெரிந்து அங்கு சென்ற பா.ஜ.க.வை சேர்ந்த ஷாயிஸா இல்மி போராட்டகாரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரு இந்தியனாக அவமதிக்கப்பட்டால் அமைதியாக போராட்டத்தை பதிவு செய்யுங்கள் என கூறினார். ஆனால் போராட்டகாரர்கள் அவரின் பேச்சை மதிக்காமல் சத்தமாக கோஷமிட்டனர். இதனால் கோபம் அடைந்த ஷாயிஸா போராட்டகாரர்களை எதிர்த்து இந்தியாவிற்கு ஆதரவாக பிரதமரை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் என ஷாயிஸா கோஷமிட்டார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து போக செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து