விராட் கோலி தவறுகளில் இருந்து நன்றாக பாடம் கற்றுள்ளார்: சோயிப் அக்தர்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      விளையாட்டு
Virat Kohli-Shoaib Akhtar 2019 10 15

இஸ்லமாபாத் : இந்திய அணி கேப்டன் விராட் கோலி தவறுகளில் இருந்து நன்றாக பாடம் கற்றுள்ளார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 11 முறை சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காமல் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் சோயிப் அக்தர் விராட் கோலியை பாராட்டியுள்ளார்.

விராட் கோலி குறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் அவர் சிறந்த கேப்டனாக மாறுவார் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், அவர் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார். சிறப்பாக கற்று கொண்டிருக்கிறார்.

டீம் காம்பினேசன், பேட்டிங் ஆர்டரை எப்படி அமைப்பது என்பது குறித்து பாடம் கற்றுள்ளார். உலகில் அவர்தான் சிறந்த கேப்டன். ஆனால், அவரைச் சுற்றி அங்கே ஏராளமான மோசமான கேப்டன்கள் உள்ளனர்.

தற்போதைய காலத்தில் சாதாரணமானவர்களை பெரும்பாலான அணிகள் கேப்டன்களாக நியமித்துள்ளது. இதை பார்க்க வேதனையாக உள்ளது. கேன் வில்லியம்சன், விராட் கோலி போன்ற சிறந்த கேப்டன்கள் இல்லை’’ என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து