சுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      விளையாட்டு
Hockey Sultan Cup India final 2019 10 19

ஜோஹர் பாரு : சுல்தான் கோப்பை ஆக்கியின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றது.

9-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக்கில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணியில் ஷிலானந்த் லக்ரா, மன்தீப் மோர், ஷர்தா நந்த் திவாரி ஆகியோர் கோல் அடித்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் அதன் பிறகு மீண்டு வந்து தோல்வியில் இருந்து தப்பியது. லீக் சுற்று முடிவில் இந்தியா 3 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 10 புள்ளியுடன் 6-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து