முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      தமிழகம்
CBI-1 2024-11-26

Source: provided

கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் மின்வாரியத்துறை அதிகாரிகள் இரண்டு பேரிடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஐந்து பேரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் திங்கள்கிழமை காலை விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை விசாரணை மேற்கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு சனிக்கிழமை முதல் நேரடியாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 7-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகச் சென்று கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள விவிஜிஆர் நகர் மற்றும் சிவலிங்கா ஆசாரியார் தெரு வில் வசிக்கும் நெரிசலில் சிக்கிக் காயமடைந்த உஷா மற்றும் அவரது தாயார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை கரூர் மாவட்டம் க. பரமத்தி பகுதியில் உள்ள பவர் கிரீட் நிறுவனத்தில் பணியாற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் 2 பேர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஐந்து பேர் ஆகியோர் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருக்கும் பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்கு காலை 11:30 மணியளவில் வருகை தந்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து