முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டபிள்.யூ.டி.ஏ. பைனல்ஸ் தொடரில் இருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா விலகல்

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ : தோள்பட்டை காயம் காரணமாக பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் பைனல்ஸ் தொடரில் இருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா விலகியுள்ளார்.

பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் தலைசிறந்த முன்னணி 8 வீராங்கனைகளுக்கு இடையில் ஆண்டுதோறும் டபிள்.யூ.டி.ஏ. பைனல்ஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 8 வீராங்கனைகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.இந்த வருடத்திற்கான பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள ஷென்சென்னில் நடைபெற்று வருகிறது.

ஒரு பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா இடம் பெற்றிருந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஒசாகா பெட்ரா கிவிட்டோவை எதிர்கொண்டார். இதில் கடும் சிரமத்திற்குப்பின் ஒசாகா 7(7)-6(1), 4-6, 6-4 என வெற்றி பெற்றார். நேற்று ஆஷ்லே பார்ட்டியை எதிர்த்து விளையாடுவதாக இருந்தது. ஆனால், தோள்பட்டை காயம் காரணமாக தொடரில் இருந்து ஒசாகா விலகியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக கிகி பெர்ட்டென்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து