முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? ராகுல், பிரியங்காவுக்கு ஸ்மிருதி சவால்

வியாழக்கிழமை, 9 மே 2024      அரசியல்
Smriti-Irani 2023 06 13

அமேதி, பா.ஜ.கவுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? என்று ராகுல், பிரியங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார். 

பிரதமர் மோடி நாட்டின் முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் பா.ஜ.கவுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? என்று ராகுல்காந்தி, பிரியங்காவுக்கு மத்திய அமைச்சரும், அமேதி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான் அவர்களுக்கு (ராகுல்காந்தி, பிரியங்கா) சவால் விடுகிறேன். பா.ஜ.க.வுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? இதற்கான டி.வி. சேனல், தொகுப்பாளர், இடம், நேரம் ஆகியவற்றை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒரு பக்கம் அண்ணன்-தங்கை ஜோடியும், இன்னொரு பக்கம் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர்களும் இருப்பார்கள். எல்லாம் தெளிவாகி விடும். எங்கள் கட்சியில் இருந்து சுதான்சு திரிவேதி போதும். அவர்களுக்கான பதிலை கொடுப்பார். இவ்வாறு ஸ்மிருதி இராணி கூறி உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்தார். அதே நேரத்தில் வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ராகுல் காந்தி இந்த முறை வயநாடு, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து