டெல்லி தேர்தலுக்கான வாக்குறுதிகளை மக்களே பரிந்துரைக்கலாம்: காங். அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2020      அரசியல்
congress office in delhi 2020 01 10

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகளை மக்களே பரிந்துரைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா அறிவித்துள்ளார். இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 21-ம் தேதியாகும். அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான கால அவகாசமே உள்ள நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மக்களே பரிந்துரைக்கலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதற்காக அக்கட்சியின் தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளதாக மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து