முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 300 தீவிரவாதிகள் - மத்திய உள்துறை எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக 300 தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவக் காத்திருப்பதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:- வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா நடை பெறவுள்ளது. அப்போது நாடு முழுவதும் சதித் திட்டங்களைச் செயல்படுத்த 300 தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் நுழைவதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் காத்திருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் வந்துள்ளது.இவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் போராளிகள் என்பது தெரியவந்துள்ளது. இதையொட்டி ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள ராணுவத்தினர் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. துணை யோடு இந்த தீவிரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர்களுக்கு ஆப்கன் தலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தீவிரவாதிகள் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த குறிவைத்திருப்பதாக தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட இந்திய ராணுவ உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். பனிக்காலம் என்பதால் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் பனி உருகத் தொடங்கும் போது இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம் என்றும் ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, காஷ்மீரில் அமைதியைக் குலைப்பதற்காக ஆப்கன் தீவிரவாதிகள் சதி வேலையில் ஈடுபடுகின்றனர். காஷ்மீருக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலே ஆப்கன் தீவிரவாதிகள் தான். ஜம்மு-காஷ்மீரில் நமது ராணுவத் தினர் எச்சரிக்கையுடன் இருப்பதால், பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஈரான், அமெரிக்கா இடையே ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடைபெற்றது. அதை போல் இங்கும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என ராணுவத்தினரை எச்சரித்துள்ளோம். மேற்கு மண்டல எல்லையையொட்டி எல்லையோர பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதனிடையே பாகிஸ்தான், வங்கதேச எல்லையையொட்டி இரும்பு வேலி அமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பஞ்சாப் மாநிலம் அமிருதசரசையொட்டி உள்ள 60 கி.மீ. எல்லை பகுதியில் இரும்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து