ஆஸி. ஓபன் டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020      விளையாட்டு
SPORTS-5 2020 01 24

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 5-ம் நாளான நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா) - எலனா ரைபாகிளா (ரஷ்யா) மோதினர். இதில் ஆஷ்லே பார்டி 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். தற்போதைய ஆஸ்திரேலிய ஓபனில் ஆஷ்லே பார்டி முதல் நபராக 4-வது சுற்றுக்கு நுழைந்துள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- குயாங் வாங்க் (சீனா) பலப்பரீட்சை நடத்தினர். இதில் செரீனா முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டிலும் 2-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். அதன்பின் சுதாரித்துக் கொண்ட செரீனா 7 (7)-6 (2) என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

வெற்றிக்கான 3-வது செட்டிலும் செரீனாவுக்கு குயாங் வாங்க் கடும் சவால் அளித்தார். இருவரும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். இந்த செட்டை குயாங் வாங்க் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதனால் குயாங் வாங்க் 6-4, 6(2) - 7(7), 7-5 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

24-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை குறிவைத்து இருந்த செரீனா வில்லியம்ஸ் 27-ம் நிலை வீராங்கனையான குயாங் வாங்க்கிடம் சரண் அடைந்து ஏமாற்றம் அடைந்தார். மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனை கிவிட்டோவா (செக்குடியரசு) 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அலெக்சாண்ட்ரோவாவை (ரஷியா) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து