முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      ஆன்மிகம்
Image Unavailable

ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். அதைத்தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி வாசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா 29 - ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 7 - ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு திருவிழாவை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதே போல் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின்கீழ் செயல்படும் அனைத்து கோவில்களின் விழாக்களும் ரத்து செய்யப்படுகிறது. சபரிமலையில் சித்திரை மாத பூஜை மற்றும் வி‌ஷூ சிறப்பு பூஜைகள் வழக்கம் போல் நடத்தப்படுமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து