முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஸ்க், மருத்துவ கருவிகள் சீனாவில் இருந்து இறக்குமதி: மத்திய அரசு முடிவு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான வெண்டிலேட்டர்கள், மாஸ்க்குகள் உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்பு சாதனங்களுக்கு பற்றாக்கறை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிப்பதற்காக சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், தற்போது கொரோனாவால் 1251பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர். 102 பேர் குணமாகியுள்ளனர். 130 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில், பொது சுகாதார அமைப்பு, மற்றும் தனியார் அமைப்புகள் மூலமாக மருத்துவ சாதனங்களின் பற்றாக்குறையை உடனடியாக போக்க முடியாது. லட்சக்கணக்கில் தேவையிருப்பதால், சீனா மற்றும் தென்கொரியா நாடுகளில் இருந்து மருத்துவ உடல் கவசங்கள், சோதனை பொருட்கள் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை விரைவாக இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், அங்குள்ள மருத்துவ சாதன தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு 3.8கோடி முகக் கவசங்கள், 6 லட்சத்து 20 ஆயிரம் பாதுகாப்பு சாதனங்களை வாங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன. அதே வேளையில் சீன நிறுவனங்களின் மருத்துவ சோதனைப் பொருட்களில் குறையுள்ளதாக சில ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹுவா சன்யிங், சீன தயாரிப்பாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இதர நாட்டு மக்களின் உயிர்களை காப்பதற்காக, இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். குறையிருப்பின், அது குறித்த துறையினருடன் பேசி சரிசெய்வோம் என கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து