முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின

திங்கட்கிழமை, 18 மே 2020      சினிமா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஆசியாவில் சில நாடுகள் சமூக முடக்கத்தை தளர்த்த தொடங்கியுள்ள நிலையில், அந்த நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளன. 

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்த நிலையில், நோய் தொற்றால் 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 18 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 665 பேர் உட்பட மொத்தம் 15 லட்சத்து 27 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் 862 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. 

ரஷ்யாவில் புதிதாக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 81 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால், கொரோனா வைரஸால் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் ஸ்பெயினை ரஷ்யா பின்னுக்கு தள்ளியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,926 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 290,000 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 91 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இதுவரை 2,722 பேர் மரணம் அடைந்துள்ளனர 

ஆசியாவில் சில நாடுகள் சமூக முடக்கத்தை தளர்த்த தொடங்கியுள்ள நிலையில், அந்த நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளன. கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள வியட்நாம், அத்தியாவசியமற்ற தொழில்களான மதுபான கூடங்கள், திரையரங்குகள் மற்றும் ஸ்பாக்களை திறந்துள்ளது. வியட்நாம் தலைநகர் ஹனோயில், பியர் கார்னர் என அழைக்கப்படும் டா ஹேய்ன் வீதி வழக்கம் போல காட்சியளித்தது. தாய்லாந்து இந்த மாத தொடக்கத்தில் மார்க்கெட்களை திறந்த நிலையில், கடந்த வாரம் வணிக வளாகங்களையும் திறந்துள்ளது. 

மியான்மரின் ரங்கூன் நகரிலும், பாகிஸ்தானின் கராச்சி நகரிலும் உள்ள சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் குறிப்பிட்ட பகுதிகளில் பொது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. ஏனெனில் பொது முடக்கத்தால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இரு நாடுகளிலும் தொற்று அதிகரித்தபோதிலும், இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து