முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்

புதன்கிழமை, 27 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முன்னாள் கேப்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய ஆக்கி அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கியவரும், ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் 3 முறை அங்கம் வகித்தவருமான பல்பீர் சிங் சீனியர் (வயது 95) பஞ்சாப் மாநிலம் மொகாலியில் மரணம் அடைந்தார். இந்திய ஆக்கி அணிக்கு அளப்பரிய பங்களிப்பை அளித்த பல்பீர்சிங்குக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று 1975-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இந்திய ஆக்கி அணியின் கேப்டன் அஜித் பால் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 

தயான்சந்த், பல்பீர்சிங் ஆகிய இருவரும் இந்திய விளையாட்டின் சகாப்தங்கள். ஆக்கி போட்டியில் இருவரும் சமவிகிதத்தில் சாதனை படைத்துள்ளனர். தயான் சந்த் பெயரை தேசிய ஸ்டேடியத்துக்கு சூட்டியும், அவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடியும் அவருக்கு ஓரளவு மரியாதை கொடுத்து இருக்கிறோம்.

ஆனால் பல்பீர் சிங் ஒருபோதும் உரிய மரியாதையை பெறவில்லை. பத்மஸ்ரீ விருது மட்டும் பல்பீர் சிங்குக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. என்னை பொறுத்தமட்டில் தயான் சந்த், பல்பீர் சிங் ஆகிய இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். அதற்கு இருவரும் தகுதி படைத்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து