முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை

வியாழக்கிழமை, 28 மே 2020      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 4,476-க்கும், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.52.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை தொடும் ஆபத்து உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் கொரோனா பயங்கரமாக பரவி வருவதால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக தங்கம் விலை கொரோனாவை விட அதிக வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 31,616-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,952-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் முக்கியமான கடைகள் திறக்கப்படாத நிலையில் தங்கம் விலை உலக சந்தையில் தொடர்ந்து மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து