முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம்: கடும் அமளியால் கேரளா சட்டமன்றம் ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2026      இந்தியா
Kerala-Assembly

திருவனந்தபுரம், சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரளா சட்டமன்றத்தில் நேர்று கடும் அமளி ஏற்பட்டத்தை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலகக் கோரியும், தங்கக் கடத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு மீது கேரள முதல்வர் அலுவலகம் அழுத்தம் கொடுப்பதாக குற்றம்சாட்டியும், கேரளாவின் ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் பதாகைகள் மற்றும் கோஷங்களுடன் கேரள சட்டமன்றத்தின் மையப்பகுதிக்குள் நேற்று நுழைந்தனர்.

முன்னதாக கேரள சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியபோது, இந்த விவகாரம் குறித்து முறையான ஒத்திவைப்பு தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து அமளியில் ஈடுபட்டனர். மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் நடத்திய கடுமையான போராட்டத்தைத் தொடர்ந்து கேரள சட்டமன்ற கூட்டம்  ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, சபரிமலை தங்கக் கடத்தில் விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இளைஞர் காங்கிரஸ் பேரணியாக செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பேரணியாக சென்றவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து காவல்துறையினர் அவர்களை விரட்டினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து