முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகா சட்டப்பேரவையில் கவர்னர் கெலாட் வெளிநடப்பு: காங். எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையால் பரபரப்பு

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2026      இந்தியா
Kerala-Assembly-1-2026-01-2

கர்நாடக, கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் கெலாட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவையில் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. மரபுப்படி மாநில கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகை தந்த கவர்னர் தாவர்சந்த் கெலாட், அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்காமல், அவர் சொந்தமாக தயாரித்த உரையை வாசிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. 

இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், உரையை வாசிக்காமல் பேரவையைவிட்டு வெளிநடப்பு செய்தார். இதனிடையே அவரை வெளியேறவிடாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாதையை வழிமறித்து முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் சித்தராமையா, ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்ற வேண்டும், அது அமைச்சரவையால் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டம். நேற்று, அமைச்சரவை தயாரித்த உரைக்கு பதிலாக, கவர்னர் தானே தயாரித்த உரையைப் படித்தார். 

இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 176 மற்றும் 163 ஆகிய பிரிவுகளை மீறுவதாகும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி கவர்னர் தனது கடமையை நிறைவேற்றவில்லை. அவரின் செயலுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தப் போகிறோம். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்” எனத் தெரிவித்தார். முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக சட்டப்பேரவையில் அரசு தயாரித்த உரையைப் படிக்காமல் கவர்னர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து