முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு

திங்கட்கிழமை, 1 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும், முதல் தேதியில் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த மாதங்களில் விலை குறைந்த நிலையில், தற்போது தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம் தொடங்கியுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த சிலிண்டர் விலை, கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3 மாதமாக குறைந்தது. தற்போது நேற்று (ஜூன் 1ம் தேதி) தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மே மாதத்தில் ரூ.569.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.606.50 ஆக குறைந்துள்ளது.

இந்த விலை ஏற்றம் மானிய விலை எரிவாயு சிலிண்டர் விற்பனையில் தாக்கம் ஏற்படுத்தாது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 761 ரூபாய் 50 காசுகளாக இருந்த சிலிண்டர் விலை மே மாதம் 569 ரூபாய் 50 காசுகளாக குறைந்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து