முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில்   கொரோனா  மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  7. 67 லட்சமாக உள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.  இந்தியாவில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.  அமைச்சர்கள் குழுவை சந்தித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஹர்ஷவர்தன்,

நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது, இந்தியாவில் கொரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று தெரிவித்துள்ளனர். சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்டாலும் தேசிய அளவில் இன்னும் இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. மக்கள் தொகை அதிகமாக இருப்பதால்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து