முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      சினிமா
Image Unavailable

Source: provided

புனே : இந்தி நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழில் வி.ஐ.பி. என்ற படத்தில் நடித்தவர் நடிகர் அனுபம் கெர்.  இந்த படத்தில் நடிகை சிம்ரனின் தந்தையாக நடித்துள்ளார்.  இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அமைப்பின் முன்னாள் தலைவரான இவர், இந்தி திரையுலகில் பிரபலம் வாய்ந்தவர். 

பல்வேறு குணசித்ர வேடங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர்.  இவரது குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 

எனது தாயார் துலாரிக்கு லேசான கொரோனா பாதிப்பு காணப்பட்டது.  இதனால், அவரை நாங்கள் கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்.  எனது சகோதரர், அவரது மனைவி மற்றும் மருமகள் ஆகியோர் மிக கவனமுடன் இருந்தபொழுதும், அவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  அவர்கள் வீட்டிலேயே தங்களை சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தி கொண்டுள்ளனர். 

இதே போன்று, எனக்கும் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது.  அதில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது என அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து