முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமி பூஜைக்கான சடங்குகள் இன்று துவக்கம்: எழில்மிகு அலங்கார தோரணங்கள், வண்ண விளக்குகளுடன் களைகட்டும் அயோத்தி

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

அயோத்தி : அயோத்தியில் பூமி பூஜைக்கான சடங்குகள் இன்று தொடங்கும் நிலையில் எழில்மிகு அலங்கார தோரணங்கள், வண்ண விளக்குகளுடன் அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டு களைகட்டியுள்ளது. 

இன்று 3-ம் தேதி முதல் அயோத்தியில் பூமிபூஜைக்கான சடங்குகள் தொடங்குகின்றன. 5-ம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பூமி பூஜையின் பிரதான நிகழ்வும் 5-ம் தேதியன்று நடைபெறுகிறது. 

இதற்காக அயோத்தி பெரிய அளவில் தயாராகி வருகிறது. இதில் 200 பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்கிறார், இது தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் வினய் காத்தியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 

பூமி பூஜை நிகழ்ச்சிக்காக அயோத்தி முழுதையும் அலங்கரிக்கும் பொறுப்பும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்று வருகிறது.  சனிக்கிழமையன்று அயோத்தியின் பல இடங்களில் வண்ண விளக்குகள், அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டன. சாலைகள் அகலப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

இப்போது அயோத்தியின் முழு அமைப்புமே மாறிவிட்டது, என்றார். போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும் போது, ஒரு இடத்தில் 5 பேருக்கு மேல் கூட வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளோம். 12 இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து