முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்வரத்து 30,000 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு: ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.35 அடி உயர்வு

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1.35 அடியாக உயர்ந்துள்ளது.

தமிழக - கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்துத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு கடந்த 6-ம் தேதி  மாலை 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று(ஆக.7) காலை 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 64.20 அடியாக இருந்தது. நேற்று காலை 65.55 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று  ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.35 அடி உயர்ந்துள்ளது.  அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் நீர் இருப்பு 28.99 டி.எம்.சி.யாக உள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து