முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் தமிழக மாணவர்கள் பலி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்: உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ரஷ்யாவில் தமிழக மாணவர்கள் 4 பேர் ஆற்றில் குளித்த போது சுழற்சியில் சிக்கி உயிரிழந்தனர். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

ரஷ்ய நாட்டில் உள்ள வால்கோகிராட் ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ஆகிய நான்கு மாணவர்களும் 8.8.2020 அன்று ரஷ்யாவிலுள்ள வோல்கா ஆற்றில் குளித்த போது, எதிர்பாராத விதமாக சுழற்சியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். 

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.   

இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு, உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அரசு உயர் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

எனது உத்தரவின் பேரில், தேவையான அனைத்து ஒருங்கிணைப்பு பணிகளையும் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து