முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை

வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2025      விளையாட்டு
Ravi-Shastri 2023 04 12

லண்டன், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக  ரவி சாஸ்திரியை நியமிக்க முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை செய்துள்ளார்.

சுற்றுப்பயணம்... 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிந்துள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ளது.

முன்னாள் வீரர்... 

ஆஷஸ் தொடரை இழந்ததால் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரை நீக்கவும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரைத்துள்ளார்.

சிந்திக்க வேண்டும்.... 

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆஸ்திரேலியாவின் பலவீனத்தை தெரிந்து வைத்துள்ள  ஒருவர் அடுத்த பயிற்சியாளராக வரவேண்டும். ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எப்படி என்பதை அறிந்த ஒருவர் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலவீனம் மற்றும் அதன் யுக்தியை எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என அறிந்த பயிற்சியாளர் நமக்கு வேண்டும் . ரவி சாஸ்திரி இங்கிலாந்தின் அடுத்த தலைமை பயிற்சியாளராக வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என தெரிவித்துள்ளார். கடந்த 2017, 2021ம் ஆண்டுகளில் ரவி சாஸ்திரி பயிற்சியாளாராக இருந்த போது இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது குறிபிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து