முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை மட்டுமே: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது. இது இறுதி அறிவிக்கை இல்லை என்று இ.ஐ.ஏ. வரைவு அறிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.

உலக யானைகள் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். அப்போது இ.ஐ.ஏ. வரைவு அறிக்கை குறித்து அவர் விளக்கம் அளித்தார். இது குறித்து பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில்,

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும் என சில தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எவ்வாறு அவர்களால் இந்த அறிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடியும்.

இது வரைவு அறிவிக்கைதானே, முழுமையான அறிவிக்கை இல்லை. 150 நாட்களுக்கு மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாகத்தான் 150 நாட்கள், இல்லை என்றால் விதிமுறைப்படி 60 நாட்கள் மட்டுமே மக்களின் கருத்துக்களைப் பெற அனுமதிக்கப்படும்.  நாங்கள் இதுவரை ஆயிரக்கணக்கான ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறோம்,

அது வரவேற்புக்குரியது. அந்த ஆலோசனைகளை நிச்சயம் பரீசிலனை செய்யப்படும். அதன்அடிப்படையில் இறுதியாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை வெளியிடப்படும். 

இப்போது இந்த சுற்றுச்சூழல் வரைவு அறிக்கைக்கு எதிராக யாரெல்லாம் போராட விரும்புகிறார்களோ அவர்கள் தங்களின் ஆட்சியின் போது மிகப்பெரிய முடிவுகளைக் கூட எந்தவிதமான கலந்தாய்வும் இன்றி எடுத்தவர்கள் தான்.  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவிப்பது தேவையில்லாதது,

முதிர்ச்சியற்றது. இதுதொடர்பாக நான் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷூக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து