எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நேற்று (ஜூலை 8) காலை குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திராவிடமணி என்பவரின் மகள் சாருமதி (16), மகன் செழியன்(15), விஜயசந்திரகுமார் என்பவரின் மகன் விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், 3 பள்ளி மாணவர்கள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து விபத்தில் பலியான மாணவர்களின் உடல் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்களின் உறவினர்கள், நண்பர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் சென்று, மாணவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழக அரசு சார்பிலும் ரயில்வே சார்பிலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


