முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே, உளவுத்துறை அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டுள்ளது. 

கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.  அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

வெள்ளை மாளிகைக்கு இது போன்ற நஞ்சு பொருட்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கன்வே, கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஒபாமாவிற்கு நஞ்சுப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டது. கடிதம் அனுப்பிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து