Idhayam Matrimony

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு உலக நாடுகளைப்போல இங்கிலாந்திலும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால், கடந்த மார்ச் மாதம் முதல் அங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

நாளடைவில் அங்கு தொற்று குறைய தொடங்கியது. இதனால் ஊரடங்கை விலக்கிக் கொண்ட அரசு, பள்ளி-கல்லூரிகளை திறந்தது. ஆனால் சமீப காலமாக இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து இங்கிலாத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் அறிவித்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற பொதுச்சபையில் அவர் கூறியதாவது:-

இங்கிலாந்து தற்போது ஒரு ஆபத்தான திருப்புமுனையை எட்டியுள்ளது. எனவே நாம் புதிய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தாக வேண்டும். அதன்படி பார்கள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) முதல் இரவு 10 மணி வரையே செயல்பட வேண்டும். திருமணங்களில் பங்கேற்கும் விருந்தினர்களின் எண்ணிக்கை 30-ல் இருந்து 15 ஆக குறைக்கப்படுகிறது.

விளையாட்டு மைதானம், விளையாட்டு கிளப்புகள் திறப்பது ரத்து செய்யப்படுகிறது.  நிறுவனங்களின் ஊழியர்கள் முடிந்தால் வீட்டில் இருந்தே பணியாற்றுங்கள். அதேநேரம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திறக்கலாம். 

அனைவரும் முக கவசங்கள் கண்டிப்பாக அணிய வேண்டும். தவறுவோருக்கு அபராதம் இரு மடங்காக அதாவது 200 பவுண்டுகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் 6 மாதங்கள் வரை நீடிக்கும். ஆனால் தொற்று அதிகரித்தால், மேலும் நீட்டிக்கப்படும்.  இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து