முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்திற்கு மருத்துவ உட்கட்டமைப்புக்காக  ரூ.3000 கோடி வழங்கக்கோரி  பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கோரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா  வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு  அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி,  ஆந்திரா, கர்நாடகா  உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

அதேநேரம், கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தப்படி, வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி மற்றும் டெல்லி, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா,  உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநில முதல்வர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

கொரோனா நிலவரம்  குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்தார். அப்போது, தமிழ்நாட்டில் நாள்தோறும் 85,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கொரோனா கண்டறியப்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைக்காக நாள் ஒன்றுக்கு ரூ.6.8 கோடி செலவழிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைக்கான செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 46,000 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இறப்பு விகிதம் 1.6 என்ற குறைந்த விகிதத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்; சென்னையில் தொற்று 1000-க்கும்  கீழ் குறைக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 150 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் தொற்றை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. மருத்துவ உட்கட்டமைப்புக்கு ரூ.3000 கோடியும், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1000 கோடியும் வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் வலியுறுத்தினார்.

மேலும்  மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடிபழனிசாமி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து