முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக பங்காற்றிய கேரளாவுக்கு ஐ.நா. விருது

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : தொற்றில்லா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்காக கேரளாவுக்கு ஐ.நா. விருது வழங்கப்படுகிறது.

தொற்றில்லா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்காக கேரளாவுக்கு இந்த ஆண்டுக்கான ஐ.நா. விருது வழங்கப்படுகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிவித்துள்ளார். 

உலகம் முழுவதுமுள்ள 7 சுகாதார அமைச்சகங்களில் கேரளாவும் தேர்வு பெற்றுள்ளது.  நோய் கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் இலவச சேவை ஆகிய பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கேரளா இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 

உலக சுகாதார அமைப்பு ஆண்டு தோறும் இதற்காக சில நாடுகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு ரஷ்யா, பிரிட்டன், மெக்சிகோ, நைஜீரியா, அர்மேனியா போன்ற நாடுகளுடன் கேரள சுகாதார அமைச்சகமும் தேர்வு பெற்றுள்ளது.  

இதுதொடர்பாக கேரள சுகாதார துறை அமைச்சர் சைலஜா கூறும் பொழுது, 

கொரோனா பாதிப்புள்ள காலங்களில் இறப்பு விகிதங்களை கட்டுப்படுத்தி உள்ளோம்.  தொற்றில்லா நோய் மீதும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தினோம்.  சுகாதார துறையில் அயர்வின்றி சேவை செய்ததற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து