முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்தியா தகுந்த பதிலடி

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். 

இந்நிலையில், நேற்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். 

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மான்கோட் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக கையெறி குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து