முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய 80 ஆயிரம் கோடி செலவாகாது: சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு பதில்

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தடுப்பு மருந்தை வெளிநாடுகளிடமிருந்து வாங்கி விநியோகிக்க இந்திய அரசிடம் 80 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறதா? என்று சீரம் நிறுவனத்தின் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்திருக்கிறது. 

கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவை தடுப்பதற்கு தடுப்பூசி எப்போது வரும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

இதற்கிடையில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து கூட்டாக ஒரு தடுப்பூசியை உருவாக்கி சோதித்து வருகின்றன.

இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் இந்த தடுப்பூசியை சோதித்து, தயாரித்து வினியோகிக்க புனேயை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் பூனேவில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா கடந்த வாரம் டுவிட்டர் பதிவு மூலம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். அதில், கொரோனா மருந்துகளை வாங்கி விநியோகிப்பதற்காக அடுத்த ஓராண்டில் இந்திய அரசிடம் 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஆதாரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுவே தற்போது நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால் என்றும் பூனவாலா கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது போல் கொரோனா தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகாது என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு 5 முறை சந்தித்து பேசி இருப்பதாக கூறியுள்ள மத்திய அரசு, கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலுக்காகும் செலவினங்கள் குறித்து இந்த குழு தங்களிடம் விரிவான அறிக்கையை தயாரித்து அளித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து