விழாக்காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டு விடாதீர்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      இந்தியா
modi 2020 10 19

Source: provided

புதுடெல்லி : நாட்டில் தற்போது விழாக் காலங்கள் என்பதால் பொதுமக்கள் கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதமும் இறுதியில் மான் கீபாத் நிகழ்ச்சி மூலமும் மக்களிடையே பிரதமர் மோடி பேசி வருகிறார். 

அதில், கொரோனா பரவல் காலம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை மோடி வலியுறுத்தி இருந்தார். தற்போது பெரும்பாலான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன.

இந்த நிலையில் நாடு முழுவதும் பரவலாக கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்தும் வருகிறது. அதே நேரத்தில் பண்டிகை காலங்கள் என்பதால் பொதுமக்கள் பொது இடங்களில் அதிக எண்க்கையில் கூடி வருகின்றனர். மற்றொரு பக்கம் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை தாக்கி வருகிறது. 

இந்த நிலையில் தம்முடைய டுவிட்டர் பக்கத்தில், நாட்டு மக்களிடையே ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று மாலை அவர் நாட்டு மக்களிடம் பேசியதாவது, 

கொரோனா மரணங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. கொரோனாவுக்கு எதிரான போர் நீண்டகாலம் நீடிக்கக் கூடியது.

தேசத்தின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைவோர் எண்ணிக்கை 88 சதவீதமாக உள்ளது. ஊரடங்கை அமல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு தடுக்கப்பட்டிருக்கிறது.

விழாக்காலம் என்பதால் கொரோனாவை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது. கொரோனா ஊரடங்கு முடிந்த போதும் வைரஸ் பாதிப்பு தொடரவே செய்கிறது. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு நீடிக்கிறது. ஆகையால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

பொதுமக்கள் அலட்சிய போக்குடன் இருப்பதை காண முடிகிறது எனவும், முகக்கவசம் அணியாமல் மக்கள் வெளியே வருகிறார்கள் அதை முற்றிலுமாக தவிர்ப்பது தான் இந்த சூழலுக்கு ஏற்றது என்றும் பிரதமர் மோடி கூறினார். 

 

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகாமவும், பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது மகிழச்சி அளிக்கிறது. ஊரடங்கு முடியலாம், ஆனால் கொரோனாவின் தாக்கம் நீடிக்கும் என தெரிவித்தார். கொரோனா ஒழிப்பில் முழு வெற்றி அடையும் வரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.  தடுப்பூசி கிடைக்கும் வரை கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வலுவிழந்து விட கூடாது. கொரோனா கால ஊரடங்கு முடிந்து வீட்டை விட்டு வெளியே வரத் தொடங்கி உள்ளோம்.

இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசிக்கு ஆராய்ச்சி நடந்து வருகிறது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தடுப்பு மருத்து சென்றடைவதே அரசின் இலக்கு.  தடுப்பூசி வரும் வரை கொரோனாவிற்கு எதிராக போர் வலவிழந்து விடக்கூடாது இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவரமாக உள்ளது.  மகிழ்ச்சியை அளிக்கும் பண்டிகைகள் இம்முறை இக்கட்டான காலகட்டத்தில் வரவுள்ளன. பண்டிகைகளை கொண்டாடும் போது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.  ஊடகங்கள் கொரோனா விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து