ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களுக்கு மேல் அடித்த வீரர்கள் : விராட் கோலி 200-வது சிக்சர்: டாப் 5-ல் 3 இந்தியர்கள்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      விளையாட்டு
IPL-Competition 2020 10 26

Source: provided

அபுதாபி : சி.எஸ்.கே.வுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி ஒரு சிக்சர் அடித்தார். ஐ.பி.எல் போட்டியில் அவரது 200-வது சிக்சர் ஆகும். 180-வது இன்னிங்சில் அவர் இதை எடுத்தார்.

200-வது சிக்சர் அடித்த 5-வது வீரர் விராட் கோலி ஆவார். இந்திய வீரர்களில் டோனி, ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களுக்கு மேல் அடித்த வீரர்கள் வருமாறு:-

1. கிறிஸ் கெய்ல் - 336 சிக்சர்

2. டிவில்லியர்ஸ் - 231

3. டோனி - 216

4. ரோகித் சர்மா - 209

5. விராட் கோலி - 200

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து