செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு: சென்னையில் முக்கிய சாலைகள் மூடப்பட்டன

புதன்கிழமை, 25 நவம்பர் 2020      தமிழகம்
Chembarambakkam 2020 11 17

Source: provided

சென்னை : நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கோட்டக்குப்பம், வானூர், வளவனூர், திண்டிவனம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது; காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 3,000 கன அடியாக அதிகரிக்கபட்டு உள்ளதால் சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளது.

சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டன மறுஅறிவிப்பு வரும் வரை சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்க்ப்படும் 

நிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் eன சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து