வாஷிங்டன் : ஐரோப்பாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாகவே கொரோனா பலி அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் கடந்த வாரத்தில் மட்டும் 67,000 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். ஊரடங்கை அமல்படுத்தியதன் காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகள் இறுதி சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கொரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.