முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி : 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதனை கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் கண்காணித்து உரிய அறிவுரைகள் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

‘நிவர்’ புயலின் போது மக்கள் அளித்த ஒத்துழைப்பு போன்று இப்போதும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன்பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நிவர் புயலின் போது முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படாத வகையில் புதிய அத்தியாயத்தை, புதிய வழிகாட்டுதலை, புதிய முன்மாதிரியை, புதிய இலக்கணத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த ஆண்டு வடகிழக்குபருவமழை 28.10.2020 அன்றுதொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் 29.11.2020 வரை உள்ள இயல்பான மழையளவு 352.6 மி.மீ.-ல், 301.8 மி.மீ. அளவு மட்டுமே பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை விட 14 சதவீதம் குறைவாகும்.

சென்னை, திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமான அளவும், கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, இராணிப்பேடை, வேலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மற்றும் ஆகிய 18 மாவட்டங்களில் இயல்பான அளவும் மீதமுள்ள 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவும் மழை பதிவாகியுள்ளது.

2566 ஏரிகள் நிரம்பின

தமிழகத்தில் உள்ள 14 ஆயிரத்து 144 பாசன ஏரிகளில், 2,566 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், அதிக மழைப் பொழிவு ஏற்பட்டுள்ள 21 மாவட்டங்களில், 9,524 பாசன ஏரிகளில், 2,270 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. இதுவன்றி, கடலோர மாவட்டங்களில் உள்ள 7378 ஏரிகளில், 1541 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன.

இந்திய வானிலை மையத்தின் அறிக்கையின்படி தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை தென் தமிழக கடற்கரையை அடைய வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழை

இதன் காரணமாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும்.

நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய கூடும். தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும். 3.12.2020 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

கூடுதல்தலைமைச் செயலர், வருவாய் நிருவாகஆணையரின் ஆணையின்படி, துணைஆட்சியர் தலைமையில் பல்துறை அலுவலர்களுடன் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதுடன் நிலைமை தொடந்து கண்காணிக்கப்பட்டு மாவட்ட அளவில் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

நிவர் புயலின் போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, ஆனால் அதன்பின்னர் சுவர் இடிந்து விழுந்து, மரம் விழுந்து இறந்தவர்களுக்கு முதல்வர் 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். அது போன்று சேதம் அடைந்த வீடுகள், உயிரிழந்த கால்நடைகள் நிவாரண நிதியை முதல்வர் அறிவித்துள்ளார்.

முகாம்களில் 2½ லட்சம் பேர்

நிவர் புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் 2.50 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம், குழந்தைகளுக்கு பால்பவுடர் உள்ளிட்ட அத்தியவாசிய தேவைகளை நிறைவேற்றி தரப்பட்டது.

புயல் சேதங்களை பார்வையிட வரும் மத்திய குழு முதல்வர், தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். அதிக மழை பெய்யும் போது வல்லரசு நாடுகளில் கூட மழை தேங்கி அதன் பின்னரே வடிகிறது. அது போல 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் கூட அதீத மழை பெய்த போதும் கூட பெருமளவில் மழை நீர் தேங்கவில்லை.

ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த அறிவுரையின் படியும், முதல்வரின் நடவடிக்கையின் காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் காரணமாக தான் மழை நீர் தேங்கும் பகுதிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

ஆகவே நிவர் புயலின் போது எப்படி அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து மக்கள் விழிப்புடன் 100 சதவீதம் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து அரசின் வழிகாட்டுதலை பின்பற்றியது போல புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக மக்கள் அச்சம் அடையாமல், விழிப்புணர்வுடன் இருந்து அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து