முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் வில்லியம்சன் இரட்டை சதம்

வெள்ளிக்கிழமை, 4 டிசம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஹாமில்டன் : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

நியூசிலாந்து தொடக்க வீரர் யங் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் டாம் லாதம் - கேப்டன் வில்லியம்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. டாம் லாதம் 86 ரன்னில் ஆட்டம் இழந்தார். வில்லியம்சன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 78 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்திருந்தது. வில்லியம்சன் ஆட்டம் இழக்காமல் 97 ரன்னுடனும், டெய்லர் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

2-வது நாள் ஆட்டம் நடந்தது. வில்லியம்சன் தனது 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். டெய்லர் 38 ரன்னிலும், அடுத்து வந்த நிக்கோலஸ் 7 ரன்னிலும், பிளன்டெல் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

ஆனாலும் வில்லியம்சன் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஜேமிசன் உறுதுணையாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் இரட்டை சதம் அடித்தார். இது அவரது 3-வது இரட்டை சதம் ஆகும். அவர் 251 ரன்னில் ஆட்டம் இழந்தார். இது இன்னிங்சில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

நியூசிலாந்து அணி 145 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஜேமிசன் 51 ரன்களுடனும், டிம்சவுத்தி 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச், கேப்ரியல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை விளையாடியது. ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 49 ரன் எடுத்து இருந்தது. கேம்பல் 22 ரன்னுடனும், பிராத்வெயிட் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து