முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாச்சல பிரதேசத்தில் கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

இட்டாநகர் : அருணாச்சல பிரதேசத்தில் 100-க்கும் மேற்கொண்ட வீடுகளுடன் சீனா ஒரு கிராமத்தை கட்டி முடித்துள்ளது செயற்கைக்கோள் படத்தில் தெளிவாக தெரியவந்துள்ளது.

இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஆண்டு லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இரு பக்கமும் உயிரிழப்பு ஏற்பட்டது. அதன்பின் பல கட்டங்களாக பல தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்றாலும், சீனா பின்வாங்குவதில் தயக்கம் காட்டியது.

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையிலும் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில் சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி சூ ஆற்றங்கரையோரத்தில் சீனா 101 வீடுகளை கொண்ட ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்துள்ளது.

இந்திய பகுதியுடன் கூடிய சுமார் 4.5 கி.மீட்டரில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த இடத்தில் வீடுகள் கட்டுவதற்கான எந்த செயல்பாடும் தென்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாத செயற்கைகோள் படத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்திய எல்லையில் சீனா கட்டுமான வேலைகளை செய்து வருவதாக வெளிவரும் செய்திகளை சமீபகாலமாக அறியலாம். கடந்த பல ஆண்டுகளாக சீனா அதை செய்து வருகிறது.

இந்திய அரசும் சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் போன்ற முக்கியமான கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது. அது எல்லை அருகில் உள்ள மக்களை இணைப்பதற்கானதாகும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எல்லை அருகில் இந்தியா அதிகமான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. ராணுவத்தை குவித்து வருகிறது என சீனா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், தற்போது சீனா கட்டியுள்ள கிராமம் அருகில் இந்தியா எந்தவொரு கட்டமைப்பையும் உருவாக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து