முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      தமிழகம்

கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, மக்கள் மனுக்களை அளிப்பதற்கு, மனுக்கள் பெறப்படும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதனால், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்த போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக, பொதுமக்கள் அவர்களது கோரிக்கை மனுக்களை தபால் மூலமாகமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டியில் மனுக்களை செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பெறப்படும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. 

மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், அவர்களது மனுக்களை அந்தப் பெட்டியில் இட்டுச் செல்லலாம். அதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு புகார் பெட்டி நிறைந்தவுடன், அவற்றை மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். இந்தப் பெட்டியில் பெறப்படும் மனுக்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து