முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      தமிழகம்
Election 2024-04-08

சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி நேற்று முன்தினம் (மார்ச் 15) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும் தமிழகம் முழுவதும் மாநகராட்சிக்குட்ப்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்சிகள் சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றும் பணிகள் நேற்ரு காலை முதலே தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுவர் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

காவல்துறை சார்பாக பாதுகாப்புக்காக துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள், துப்பாக்கிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, துப்பாக்கி உரிமம் வைத்திருந்தவர்கள் தங்களது துப்பாக்கிகளை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து