இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டார்.
அப்போது இலங்கை பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெய்சங்கர் பயணம் மேற்கொண்ட பிறகு பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு செல்ல இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.