முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருகின்ற 30ஆம் தேதி அம்மா திருக்கோயில் திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் : கிராமம் கிராமம் தோறும் மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : வருகின்ற 30ஆம் தேதி அம்மா திருக்கோயில் திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்என்று கிராமம் கிராமம் தோறும் மக்களுக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் நேரில் அழைப்பு கொடுத்தார் 

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள டி. குன்னத்தூர் அருகே கழக அம்மா பேரவை சார்பில் அமைச்சர்ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு தலா 7 அடிக்கு மேல் முழு நீள வெண்கல சிலை அமைத்து கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது 

கடந்த தைப்பொங்கலில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் முழு நீல வெண்கல சிலையை வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரதிஷ்டை செய்யப்பட்டது தற்போது தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வரும் வேளையில் வருகின்ற 30ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது 

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பங்கேற்று திறப்பு விழா செய்து திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர் இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் மக்கள் பங்கேற்கவுள்ளனர் 

அதனைத் தொடர்ந்து விழா திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நேரடியாக சென்று அம்மாவின் திருக்கோவில் கும்பாபிஷேக பத்திரிகையை வழங்கி குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் ஆர் வி உதயகுமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் 

அப்போது கிராம மக்களும் திருமங்கலம் தொகுதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அம்மா கோவில் அமைந்து வருகிறது நிச்சயம் இந்த விழாவில் நாங்கள் சிறப்பிக்க நாங்கள் குடும்பத்தோடு பங்கு இருப்போம் என்று அமைச்சரிடம் கூறினார் 

இந்த நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் எஸ் சரவணன் எம்எல்ஏ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே தமிழரசன், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி ,ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் ஏ கே பி சிவசுப்பிரமணியன், மாவட்ட அணி நிர்வாகிகள் பால்பாண்டி, வக்கீல் தமிழ்ச்செல்வன், லட்சுமி, காசிமாயன், சிங்கராஜ பாண்டியன், மகேந்திர பாண்டியன், ஆர்யா, போத்தி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து